கொழும்பு எஸ்.சி.சி மைதாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டில்சான் 30 ஓட்டங்களையும், தரங்க 39 ஓட்டங்களையும் பெற்று சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் குமார் சங்ககார நிதானமாக துடுப்பெடுத்தாடி 75 ஓட்டங்களை பெற்றார். இது ஒரு நாள் போட்டியில் 58 ஆவது அரைச் சதமாகும். மேலும் ஜயவர்தன 44 ஓட்டங்களையும் கப்புகெதர 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து களமிறங்கிய மெத்தியூஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களை பெற்றார்.
மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சில் பீன் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
278 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்று 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கெயில் மற்றும் பரத் எவ்வித ஓட்டங்களையும் பெறாது ஆட்டமிழந்தனர். கிறிஸ் கெயில் டில்காரவின் முதல் பந்து வீச்சிலேயே போல்ட் முறையில் ஆட்டமிழக்க தொடர்ந்து மறுமுனையில் இருந்த பரத் பெரேராவின் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் 2 விக்கட்டுகளை இழந்து எவ்வித ஓட்டங்களையும் பெறாது இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் இடைநிலை வீரர்களாக களமிறங்கிய பிரவோ சர்வான் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி மூன்றாவு விக்கட்டுக்காக இணைப்பாட்டமாக 125 ஓட்டங்களை பெற்றனர்.
பிராவோ 79 ஓட்டங்களுடனும், சர்வான் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் களத்தில் நின்று போராடிய போதும் இலங்கை அணியின் சிறப்பான பந்து வீச்சாலும் களத்தடுப்பாலும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் தவற விட்டது.
அணித்தலைவர் டெரன் சமி 3 ஓட்டங்களுடனும், பாக் 49 ஓட்டங்களையும், மில்லர் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மெண்டிஸ் 4 விக்கட்டுகளையும், பெரேரா 3 விக்கட்டுகளையும் மற்றும் பெர்ணன்டோ 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் அடிப்படையில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
மேலும் இன்றைய போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான குலசேகர, மாலிங்க மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முரளி ஆகியோர் விளையாடவில்லை. பதில் வீரர்களாக பெரேரா, ஹேரத், மெண்டிஸ் ஆகியோர் களமிறங்கி இருந்தனர்.
இன்றை போட்டியின் ஆட்டநாயகனாக சங்ககார தெரிவு செய்யப்பட்டதோடு தொடர் ஆட்டநாயகனாக தரங்க தெரிவு செய்யப்பட்டார்.

1 comment:
This way my buddy Wesley Virgin's report launches with this SHOCKING AND CONTROVERSIAL VIDEO.
You see, Wesley was in the army-and shortly after leaving-he found hidden, "MIND CONTROL" tactics that the government and others used to obtain whatever they want.
As it turns out, these are the exact same secrets many celebrities (notably those who "come out of nowhere") and the greatest business people used to become wealthy and famous.
You probably know that you use only 10% of your brain.
That's because most of your brainpower is UNCONSCIOUS.
Maybe this thought has even occurred IN YOUR very own mind... as it did in my good friend Wesley Virgin's mind 7 years ago, while riding an unregistered, trash bucket of a vehicle with a suspended driver's license and with $3.20 in his bank account.
"I'm very fed up with living paycheck to paycheck! Why can't I become successful?"
You've taken part in those types of questions, ain't it so?
Your very own success story is going to be written. You just need to take a leap of faith in YOURSELF.
Watch Wesley Virgin's Video Now!
Post a Comment