Friday, January 28, 2011

ரூ.40 கோடி விளம்பர ஒப்பந்தத்தில் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ.40 கோடி பெறுமான புதிய விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டின் இந்த முதல் 27 நாட்களில் சச்சின் டெண்டுல்கர் நாளொன்றுக்கு ரூ.1.5 கோடி விளம்பர வருமானம் ஈட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்த புதிய ஒப்பந்தத்தில் புனேயில் உள்ள ரியல் ஹெஸ்டேவு நிறுவனமான அமித் நிறுவனத்துடன் ரூ.9 கோடி ஒப்பந்தத்திலும், எஸ்.குமார்ஸ் ஜவுளி உற்பத்தி நிறுவனத்துடன் ரூ.12- 13 கோடி ஒப்பந்தத்திலும் சச்சின் கையெழுத்திட்டுள்ளார்.


இதற்கு முன் கொக்ககோலா ரூ.20 கோடி ஒப்பந்தம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமித் ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பர ஒப்பந்தத்தில் இரண்டு அருமையான வீடுகளும் சச்சினின் ஒப்பந்தத்தில் உள்ளது. வீடு ஒன்று ரூ.2.5 கோடி பெறுமானமுடையது.

டெண்டுல்கர் தற்போது ஹெடிதாஸ், சுவிஸ். விலை உயர்ந்த கடிகார நிறுவனம், கேனன், ஐ.டி.சி., அவைவா லைப் இன்ஸுரன்ஸ், டொஷீபா ஆகிய நிறுவனங்கள் உட்பட 17 நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருந்து வருகிறார்.

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates