Tuesday, January 11, 2011

ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன், ஆனால்..........

ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன், ஆனால்....... அதைப் பற்றி பேச விரும்பவில்லை என இலங்கையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சனத் ஜயகூ+ரிய தெரிவித்தார்.

சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் போட்டி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை அணியின் அதிரடி ஆட்டநாயகன் ஜயசூர்யா கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜயசூரிய,


கடந்த 3 ஐ.பி.எல். போட்டியில் நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிமை மகிழ்ச்சியானது. இந்த ஐ.பி.எல். போட்டியில் வாய்ப்பு இல்லை. இதுதொடர்பாக நான், உண்மையிலேயே பேச விரும்பவில்லை. ஆனால் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாட ஆர்வமாக இருந்தேன்.

மேலும் டெண்டுல்கர் சமீபத்தில் தனது 50 ஆவது டெஸ்ட் சதத்தை பெற்றார். அவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆவார். கிரிக்கெட்டின் தூதுவர் ஆவார். தற்போது உள்ள இலங்கை அணி சிறப்பாக உள்ளது. உலக கிண்ணத்தில் இலங்கை அணி சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன்.


இந்திய துணை கண்டத்தில் உள்ள நாடுகள்தான் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. 1996 ஆம் ஆண்டு நாங்கள் உலக கிண்ணத்தை வென்றது மறக்க இயலாதது. அந்த போட்டியில் நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம். என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates