பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலத்தில் இலங்கை வீரர் ஜெயசூர்யவை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதேவேளை நேற்று நடைபெற்ற ஏலத்தில் சவ்ரவ் கங்குலி, பிரைன் லாரா, கிரிஸ்கெய்ல் ஆகியோரும் நேற்று ஏலத்தில் எடுப்பட வில்லை. எனினும் யாரும் அறியாத அவுஸ்திரேலிய சகலதுறை ஆட்டகாரர் கிறிஸ்டியனை டெக்கான் சார்ஜர்ஸ் அணி ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்தியன் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான 4ஆவது தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் முதல் நாள் நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் கவுதம் கம்பீர் அதிகபட்சமாக ரூ.11.04 கோடிக்கு ஏலம் போனார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
ரொபின் உத்தப்பாவை புனே அணியும், யூசுப் பதானை கொல்கத்தா அணியும் ஏலம் எடுத்தன. இவர்கள் இருவரும் தலா ரூ.9.66 கோடிக்கு விற்பனையானார்கள். இந்திய அணியின் மற்றொரு வீரர் ரோஹித் சர்மா 9.20 கோடிக்கும், இர்பான் பதான் ரூ.8.74 கோடிக்கும், யுவராஜ்சிங் ரூ.8.28 கோடிக்கு முறையே மும்பை, டெல்லி, புனே அணிகளால் வாங்கப்பட்டனர்.
சவ்ரவ் கங்குலி, பிரைன் லாரா, கிரிஸ்கெய்ல் ஆகியோரை முதல் சுற்றில் எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனிடையே, இன்று இரண்டாவது நாளாக ஏலம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் அணியைச் சேர்ந்த அதிகம் பிரபலமாகாத சகலதுறை வீரர் டேனியல் கிறிஸ்டியனை டெக்கான் சார்ஜர்ஸ் அணி ரூ.4.10 கோடிக்கு ஏலம் எடுத்தது.
தமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜியை கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. டெல்லி அணி உமேஷ் யாதவ், அசோக் ஜிண்டா, அஜித் அகர்கர் ஆகியோரை ஏலம் எடுத்தது. முனாப் பட்டேலை மும்பை இந்தியன்ஸ் அணி சுமார் ரூ.3.22 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இலங்கை அணியின் மின்னல் வேக ஆட்டக்காரராக திகழ்ந்த ஜெயசூர்ய ஏலம் எடுக்க ஆளில்லாமல் போனார். இதேபோல முஹமது கைப், இங்கிலாந்தின் மைக்கேல் ஹார்டி, நியூசிலாந்தின் ஜேக்கப் ஓரம், கெய்ல் மில்ஸ், இங்கிலாந்து அணியின் ரவி பொப்பாரா, மான்டி மனேசர், டின் பிரசன்னர், இலங்கையின் பர்வேஸ் மகரூப் ஆகியோரும் ஏலம் போகவில்லை.
சென்னை அணியில் அஸ்திரேலிய வீரர் பெல் கெல்பான்ஸ்கோ 46 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
வீரர்கள் விலை முழு விவரம் : இன்று நடந்த ஏலத்தில் வீரர்கள் எந்த விலைக்கு போயினர் என்ற முழு விவரம் வருமாறு:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஆர் அஸ்வின் 850,000 அமெரிக்க டாலர்
எஸ் பத்ரிநாத் 800,000 அமெரிக்க டாலர்
டோக் போலிங்கர் 700,000 அமெரிக்க டாலர்
மைக்கல் ஹசி 425,000 அமெரிக்க டாலர்
ட்வைன் ப்ராவோ 200,000 அமெரிக்க டாலர்
விரிதிமன் சாகா 100,000 அமெரிக்க டாலர்
டெக்கான் சார்ஜர்ஸ்
டேல் ஸ்டெயின் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்
கெமரூன் ஒயிட் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
குமார் சங்ககார 700,000 அமெரிக்க டாலர்
கெவின் பீட்டர்சன் 650,000 அமெரிக்க டாலர்
ப்ரக்யான் ஓஜா 500,000 அமெரிக்க டாலர்
இஷாந்த் சர்மா 450,000 அமெரிக்க டாலர்
அமீத் மிஷ்ரா 300,000 அமெரிக் டாலர்
ஜே பி டூமினி 300,000 அமெரிக்க டாலர்
ஷிகார்தவான் 300,000 அமெரிக்க டாலர்
டில்லி டேர்டெவில்ஸ்
இர்பான் பதான் 1.0 மில்லியன் அமெரிக்க டாலர்
டேவிட் வார்னர் 750,000 அமெரிக்க டாலர்
மொர்னே மொர்கல்475,000 அமெரிக்க டாலர்
ஜேம்ஸ் ஹோப்ஸ் 350,000 அமெரிக்க டாலர்
ஹெரோன் பிஞ்ச் 300,000அமெரிக்க டாலர்
நாமன் ஓஜா 270,000 அமெரிக்க டாலர்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
டேவிட் ஹசி 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்
ஹெடம் கில்கிறிஸ்ட் 900,000 அமெரிக்க டாலர்
தினேஷ் கார்த்திக் 900,000 அமெரிக்க டாலர்
பியுஸ் சாட்ஙா 900,000அமெரிக்க டாலர்
அபிஷேக் நாயர் 800,000 அமெரிக்க டாலர்
பிரவீன் குமார் 800,000 அமெரிக்க டாலர்
ஸ்டூவர்ட் போர்டு 400,000அமெரிக்க டாலர்
ரியான் ஹாரிஸ் 325,000 அமெரிக்க டாலர்
கொச்சி
மகில ஜெயவர்த்தன 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்
முத்தையா முரளிதரன் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
ரவிந்த்ர ஜடேஜா 950,00 அமெரிக்க டாலர்
ஸ்ரீசந்த் 900,000 அமெரிக்க டாலர்
ஆர் பி சிங் 500,000 அமெரிக்க டாலர்
ப்ரண்டன் மெக்கல்லம் 475,000 அமெரிக்க டாலர்
பிராட் ஹோட்ஜ் 425,000 அமெரிக்க டாலர்
வி வி எஸ் லஷ்மண் 400,000 அமெரிக்க டாலர்
பார்த்தீவ் பட்டேல் 290,000அமெரிக்க டாலர்
ஸ்டீவன் ஸ்மீத் 200,000 அமெரிக்க டாலர்
ரமேஷ் பவார் 180,000 அமெரிக்க டாலர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கவுதம் கம்பீர் 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்
யூசூப் பதான் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்
கலிஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
மனோஜ் திவாரி 475,000அமெரிக்க டாலர்
ஷாகிப் அல் ஹசன் 425,000 அமெரிக்க டாலர்
பிரட் லீ 400,000 அமெரிக்க டாலர்
யோயின் மோர்கன் 350,000 அமெரிக்க டாலர்
பிரட் ஹாடின் 325,000 அமெரிக்க டாலர்
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா 2 மில்லியன் அமெரிக்க டாலர்
ஹெண்ரு சைமண்ட்ஸ் 850,000 அமெரிக்க டாலர்
டேவி ஜேகோப்ஸ் 190,000 அமெரிக்க டாலர்
ஜேம்ஸ் ப்ராங்க்லின் 100,000அமெரிக்க டாலர்
புனே வாரியர்ஸ்
ரொபின் உத்தப்பா 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்
யுவராஜ் சிங் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்
ஏஞ்லோ மேத்யூஸ் 950,000 அமெரிக்க டாலர்
ஹசிஸ் நெக்ரா 850,000 அமெரிக்க டாலர்
கிரேம் ஸ்மீத் 500,000 அமெரிக்க டாலர்
காலம் பெர்குசான் 300,000 அமெரிக்க டாலர்
டிம் பெயின் 270,000 அமெரிக்க டாலர்
நாதன் மெக்கல்லம் 100,000 அமெரிக்க டாலர்
ராஜஸ்தான் ரோயல்ஸ்
ரோஸ் டெய்லர் 1 மில்லியன் அமெரிக்க டாலர்
ஜோகன் போத்தா 950,000 அமெரிக்க டாலர்
ராகுல் டிராவிட் 500,000 அமெரிக்க டாலர்
போல் காலிங்வுட் 250,000 அமெரிக்க டாலர்
பெங்களூரு ராயல் செலஞ்சர்ஸ்
சவுரப் திவாரி 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்
ஏபி டி வில்லியர்ஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
ஜாகிர் கான் 900,000 அமெரிக்க டாலர்
புஜாரா 700,000அமெரிக்க டாலர்
திர்க் நான்ஸ் 650,000அமெரிக்க டாலர்
தில்ஷான் 650,000அமெரிக்க டாலர்
டேனியல் வெட்டோரி 550,000அமெரிக்க டாலர்
கம்பீர் சாதனை :
இன்றைய ஏலத்தில் கவுதம் காம்பீர் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார்.
விலைபோகாதவர்கள் :
தமிம் இக்பால், சமாரா கபுகேடேரா, முரளி கார்த்திக், அஜந்த மெண்டிஸ், கிரெம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர்சன், தில்காரா பெர்ணாண்டோ, லுக் ரைட், மேட் ப்ரையர், மார்க் பவுச்சர், கிரேம் மனோ, பிரையன் லாரா, கிப்ஸ், ஜெசி ரைடர், சவுரவ் கங்கூலி மற்றும் கிறிஸ் கெயில்
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக இருபது-20 தொடர் நடந்தது. நான்காவது தொடர் எதிர்வரும் ஏப், 8 இல் துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி போன்ற 8 அணிகளுடன் சேர்த்து, புதியதாக புனே கொச்சி என மொத்தம் 10 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன.
வீரர்கள் தக்கவைப்பு :
சென்னை சூப்பர் கிங்ஸ் (தோனி, ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்கல்), மும்பை இந்தியன்ஸ் (சச்சின், ஹர்பஜன், போலார்டு, மலிங்கா) அணிகள் தங்களது 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ராஜஸ்தானின் வார்ன், வாட்சன், பெங்களூருவின் விராத் கோஹ்லி மற்றும் டில்லியின் சேவக் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.20 கோடி முதல் ரூ. 45 கோடி வரை செலவிடுகிறது.
கொல்கத்தா, டெக்கான், பஞ்சாப் அணிகள் அனைத்து வீரர்களையும் விடுவித்துள்ளதால், இந்த அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் பயன்படுத்தலாம்.

No comments:
Post a Comment