முதல் 3 ஐ.பி.எல். போட்டியுடன் இந்திய மற்றும் சர்வதேச வீரர்களுடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் அனைத்து வீரர்களும் புதியதாக ஏலத்திற்கு விடப்பட்டு தேர்வு இடம்பெறுகின்றது.
இருப்பினும் கடந்த போட்டிகளில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களில் 4 பேரை தொடர்ந்து வைத்துக்கொள்ளலாம் என்ற விதிப்படி தோனி, சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய், எல்பி மோர்கல் ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெண்டுல்கர், ஹர்பஜன்சிங், பொல்லார்ட், மலிங்க, ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷெவாக்கை டெல்லி டெயார்டெவில்சும், விராட் கோக்லியை பெங்களுர் ரோயல் செலஞ்சர்சும், வார்னே, வொட்சன் ஆகியோரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளன. இந்த 12 வீரர்களை தவிர மொத்தம் 350 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.
வீரர்களின் ஏலம் இன்றும், நாளையும் நடைபெறும் அதே வேளை எந்தெந்த வீரர்களை எவ்வளவு தொகை வரை ஏலத்தில் கேட்பது என்று ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் இறுதி கட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.
ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலத்தில் வாங்க அதிகபட்சமாக ரூ.41 கோடி செலவு செய்யலாம் என எதிர்பார்க்ப்படுகின்றது. ஆனால் சென்னை மற்றும் மும்பை அணிகள் ஏற்கனவே 4 வீரர்களுக்கு ரூ.20.5 கோடியை ஒதுக்கி விட்டதால் எஞ்சிய தொகையான 20.5 கோடியை வைத்து தான் மற்ற வீரர்களை ஏலத்தில் கேட்க முடியும். இதே போல் ஒரு சில வீரர்களை வைத்துள்ள அணிகளும் அவர்களுக்கான சம்பளத்தை ஒதுக்கிய தொகை போக மீதம் உள்ளவற்றை தான் வாங்க முடியும்.
ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 20 இந்திய வீரர்களையும், அதிகபட்சம் 10 வெளிநாட்டு வீரர்களையும் ஒப்பந்தம் செய்வதொடு, தற்போதைய ஏலப்பட்டியலில் 48 இந்திய வீரர்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளனர்.
இதன் இன்றைய ஏலத்தில்,
பெங்களூர் அணி- தில்ஷான், சகீர் கான்
இதில் பெங்களுரு அணிக்காக சகீர் கான் ரூ.4.14 கோடிக்கும், தில்ஷான் ரூ.3 கோடிக்கும், ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா அணி - யூசுப் பதான், கவுதம் கம்பீர், கலிஸ் கொல்கத்தா அணிக்காக யூசுப் பதான் ரூ9.16 கோடிக்கும், கவுதம் கம்பீர் ரூ.11.04 கோடிக்கும், தென் ஆப்ரிக்காவின் காலிஸ் ரூ.5.1 கோடிக்கும் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.
புனே அணி - யுவராஜ்
புனே அணிக்காக யுவராஜ் ரூ8,28 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி- ரோஸ் டெய்லர்
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் ரூ 4.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஐதராபாத் அணி- கெவின் பீட்டர்சன், சங்ககார
ஐதராபாத் அணிக்காக இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் ரூ 2.9 கோடிக்கும், அவுஸ்திரேலியாவின் கெமரூன் ஒயிட் ரூ. 5.06 கோடிக்கும், இலங்கையின் சங்ககார ரூ. 3.2 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
கொச்சி அணி- ஜெயவர்த்தன
கொச்சி அணிக்காக இலங்கையின் ஜெயவர்த்தன ரூ 6.9 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
மும்பை அணி- ரோஹித் சர்மா, சைமண்ட்ஸ்
மும்பை அணிக்காக ரோஹித் சர்மா ரூ. 9.2 கோடிக்கும், அவுஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ் ரூ. 3.9 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
பஞ்சாப் அணி- கில்கிறிஸ்ட்
பஞ்சாப் அணிக்காக அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் ரூ. 4.1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
வீரர்கள் விலை முழு விவரம் :
இன்று நடந்த ஏலத்தில் வீரர்கள் எந்த விலைக்கு போயினர் என்ற முழு விவரம் வருமாறு: எந்த அணி வாங்கியது என்பது அடைக்குறிப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
கவுதம் காம்பீர்- ரூ. 11. 04 கோடி ( கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி )
இலங்கை அணி வீரர் தில்சான் ரூ. 2. 9 கோடி ( ரோயல் செலஞ்சர்ஸ்)
ஜாகீர்கான் ரூ. 4. 1 கோடி (ராஜஸ்தான் ரோயல் செலஞ்சர்)
நியூஸிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் - 4. 6 கோடி ( ராஜஸ்தான் ரோயல் செலஞ்சர்)
யூசூப் பதான் - ரூ. 9. 66 கோடி, (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் - ரூ. 2. 9 கோடி ( டெக்கான் சார்ஜர்)
யுவராஜ்சிங்- ரூ. 8. 28 கோடி ( சகாரா புனே வாரியார் அணி )
தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் - ரூ. 5. 1 கோடி ( ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு )
ஜெயவர்த்தனே - 6. 9 கோடி ( கொச்சி அணி)
ஒயிட் - ரூ. 5.1 கோடி ( டெக்கார் சார்ஜர்ஸ் )
கலீஸ் - ரூ. 5.1 கோடி ( கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
ரோகித்சர்மா- ரூ. 9 . 2 கோடி ( மும்பை இந்தியன்)
சங்ககார- ரூ. 3. 2 கோடி ( டெக்கான் சார்ஜர் )
கில்கிறிஸ்ட் - ரூ. 4. 1 கோடி ( கிங்ஸ்லெவன்)
டிராவிட் - ரூ. 2. 3 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ் )
தென்ஆப்ரிக்க வீரர் ஸ்மித் - ரூ. 2. 3 கோடி (புனே வாரியர்ஸ் )
உத்தப்பா - ரூ. 9. 7 கோடி (புனே)
தென்ஆப்பிரிக்க வீரர் போத் - ரூ. 4 .4 கோடி ( ராஜஸ்தான் ராயல் அணி)
லஷ்மன் -ரூ. 1. 84 கோடி (கொச்சி அணி )
மெக்கலம் - ரூ. 2. 2 கோடி ( கொச்சி அணி )
விட்டோரி -ரூ. 2.5 லட்சம் ( பெங்களூரூ அணி)
ஸ்ரீசாநத் - ரூ. 4. 41 கோடி (கொச்சி அணி),
இர்பான் பதான் - ரூ. 8. 7 கோடி ( டில்லி டேர்டெவில்ஸ்)
டூமினி - ரூ.1. 4 கோடி (டெக்கான் சார்ஜர் )
இன்றைய ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.20 கோடி முதல் ரூ. 45 கோடி வரை செலவிடுகிறது.
கொல்கத்தா, டெக்கான், பஞ்சாப் அணிகள் அனைத்து வீரர்களையும் விடுவித்துள்ளதால், இந்த அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் பயன்படுத்தலாம்.


No comments:
Post a Comment