தரங்க சதம்: இலங்கை அணி 8 விக்கட்டுகளால் இலகு வெற்றி
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தரங்கவின் சதத்துடன் இலங்கை அணி 8 விக்கட்டுகளால் இலகுவாக வெற்றி பெற்றது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கெயில் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பரத் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய டெரன் பிராவோ 39 ஓட்டங்களையும்இ சர்வான் 21 ஓட்டங்களையும்இ டயன் பிராவோ 39 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மலிங்க 3 விக்கட்டுகளையும்இ குலசேகர மற்றும் முரளிதரன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.