Monday, January 10, 2011

கங்குலி இல்லாத கொல்கத்தா அணி ஐ.பி.எல். இல் சாத்தியமில்லை : ஷாருக்கான்

 கங்குலி இல்லாத கொல்கத்தா அணி ஐ.பி.எல். இல் சாத்தியமில்லை என கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். 4ஆவது போட்டிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்களின் ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பல முன்னணி வீரர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

எனினும் முன்னாள் இந்திய அணியின் தலைவரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலிக்கு ஆரம்ப தொகையாக ரூ.1.8 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அவரது சொந்த கொல்கத்தா அணியே அவரை தேர்ந்து எடுக்க வில்லை.


இதனால் கோபமடைந்த அவரது ரசிகர்கள் கொல்கத்தாவில் ஷாருக்கானின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கங்குலி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கையில்,

 கங்குலி இல்லாத ஐ.பி.எல். அணி கொல்கத்தாவில் சாத்தியமில்லை.  எனவே இவ்விடயமாக தான் கங்குலியை சந்தித்து பேச இருப்பதாகவும், அவரை தன்னுடைய கொல்கத்தா அணியில் தேர்ந்தெடுப்பதற்கு முயற்சி செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates