Friday, February 4, 2011

தரங்க சதம்: இலங்கை அணி 8 விக்கட்டுகளால் இலகு வெற்ற


தரங்க சதம்: இலங்கை அணி 8 விக்கட்டுகளால் இலகு வெற்றி
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தரங்கவின் சதத்துடன் இலங்கை அணி 8 விக்கட்டுகளால் இலகுவாக வெற்றி பெற்றது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கெயில் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பரத் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய டெரன் பிராவோ 39 ஓட்டங்களையும்இ சர்வான் 21 ஓட்டங்களையும்இ டயன் பிராவோ 39 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மலிங்க 3 விக்கட்டுகளையும்இ குலசேகர மற்றும் முரளிதரன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

204 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42.3 ஓவர்களில் 2 விக்கட்டுகளை மட்டும் இழந்து 199 ஓட்டங்களை பெற்ற போது இலங்கை அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டில்சான் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுபுரத்தில் இருந்த உப்புல் தரங்க ஆட்டமிழக்காது 143 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக பந்துகளில் 9 ஆவது ஒருநாள் சதமான 101 ஓட்டங்களை பெற்றார். மேலும் குமார் சங்ககார 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கஇ தொடர்ந்து களமிறங்கிய ஜயவர்தன 48 ஓட்டங்களுடன் அணி வெற்றியை முடிவு செய்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் ராம்போல் மற்றும் பிராவோ தலா ஒவ்வொரு விக்கட்டுகளை கைப்பற்றினர்.
இதன் அடிப்படையில் மூன்று ஒரு நாள் கொண்ட தொடர் போட்டியில் இலங்கை 1-0 என முன்னிலையில் உள்ளது.
நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக உப்புல் தரங்க தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates