ஐ.பி.எல் கிரிக்கட் போட்டியில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மாத்திரமே விளையாடுவேன் என இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முரளிதரன் அளித்த பேட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடி உள்ளேன். அந்த அணியினருடன் சில மகிழ்ச்சிகரமான தருணத்தை அனுபவித்து இருக்கிறேன். எனது மனைவியின் ஊர் சென்னை தான். நான் அணி மாறுவது அவருக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. ஆனால் இது தான் ஐ.பி.எல். கிரிக்கெட்.
சென்னையையும், எனது அணி வீரர்களையும், அற்புதமான அணி தலைவர் தோனியையும் தவற விடுவது வருத்தம் அளிக்கிறது. சென்னை அணிக்காக மகிழ்ச்சியுடன் ரசித்து விளையாடினேன். கடந்த ஆண்டு ஐ.பி.எல். மற்றும் சாம்பியன்ஸ் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது மறக்க முடியாது. நானும் நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றினேன்.
கொச்சி புதிய அணி. புதிய தலைவர், புதிய இலக்குகளை கொண்டது. இதுவும் எனக்கு உற்சாகம் அளிக்கிறது. சொந்த ஊரில் ஆடுவது போன்ற சூழல் எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன். கொச்சி மக்கள் எனது தாய்மொழியை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
கொச்சி அணி எனது மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறது. அவர்களை நான் ஏமாற்றமாட்டேன். எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன். இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டியில் நீடிக்க விரும்புகிறேன் என்று முரளிதரன் கூறியுள்ளார்

No comments:
Post a Comment