நான்காவது ஐ.பி.எல். 20- இருபது கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் மே 22 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு ஐ.பி.எல். வீரர்களின் 2 நாட்கள் ஏலம் பெங்களுரில் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
முதல் 3 ஐ.பி.எல். போட்டியுடன் இந்திய மற்றும் சர்வதேச வீரர்களுடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் அனைத்து வீரர்களும் புதியதாக ஏலத்திற்கு விடப்பட்டு தேர்வு இடம்பெறுகின்றது.
இருப்பினும் கடந்த போட்டிகளில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களில் 4 பேரை தொடர்ந்து வைத்துக்கொள்ளலாம் என்ற விதிப்படி தோனி, சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய், எல்பி மோர்கல் ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெண்டுல்கர், ஹர்பஜன்சிங், பொல்லார்ட், மலிங்க, ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷெவாக்கை டெல்லி டெயார்டெவில்சும், விராட் கோக்லியை பெங்களுர் ரோயல் செலஞ்சர்சும், வார்னே, வொட்சன் ஆகியோரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளன. இந்த 12 வீரர்களை தவிர மொத்தம் 350 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.