Monday, January 31, 2011

இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள்: முதல் போட்டி மழையால் இடைநிறுத்தம்



இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள்: முதல் போட்டி மழையால் இடைநிறுத்தம்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிகள் 3 ஒரு நாள் கொண்ட போட்டி தொடரில் பங்கேற்கின்றது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுபுரத்தில் இருந்த ஹெட்ரியன் பரத் 129 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 113 ஓட்டங்களை பெற்று ஒரு நாள் போட்டியில் தனது முதலதவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

மேலும் பிராவோ 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சர்வான் 75 ஓட்டங்களை பெற்று 34 ஆவது அரைச் சதத்தை பெற்றார்.


இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க 3 விக்கட்டுகளையும், குலசேகர ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.


Sunday, January 30, 2011

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி அவுஸ்திரேலியா 51 ஓட்டங்களால் வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 51 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றுள்ளது.



பிரிஸ்பேனில் இரவுபகல் ஆட்டமாக நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுளையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில், கிளாக் 54 ஓட்டங்களையும், ஹெடின் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

Friday, January 28, 2011

ரூ.40 கோடி விளம்பர ஒப்பந்தத்தில் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ.40 கோடி பெறுமான புதிய விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டின் இந்த முதல் 27 நாட்களில் சச்சின் டெண்டுல்கர் நாளொன்றுக்கு ரூ.1.5 கோடி விளம்பர வருமானம் ஈட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்த புதிய ஒப்பந்தத்தில் புனேயில் உள்ள ரியல் ஹெஸ்டேவு நிறுவனமான அமித் நிறுவனத்துடன் ரூ.9 கோடி ஒப்பந்தத்திலும், எஸ்.குமார்ஸ் ஜவுளி உற்பத்தி நிறுவனத்துடன் ரூ.12- 13 கோடி ஒப்பந்தத்திலும் சச்சின் கையெழுத்திட்டுள்ளார்.

ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் போட்டியை நடாத்த அனுமதி மறுப்பு



 ஈடன் கார்டன் மைதானத்தின் புதுப்பித்தல் பணி நிறைவு பெறாததால், இங்கு உலக கிண்ண தொடரின் முதல் போட்டியை நடாத்த, ஐ.சி.சி., அனுமதி மறுத்துள்ளது. இதனால் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி பெங்களுருவுக்கு மாற்றப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Wednesday, January 26, 2011

நான் கவிஞன் அல்ல கிரிக்கட் மட்டை பிடிக்க பிறந்தவன்: சச்சின்


 எனது தந்தை, எனது மூத்த சகோதரர் நிதின் டெண்டுல்கர் ஆகியோர் கவிஞர்கள் என்றாலும், நான் கிரிக்கெட் மட்டையை பிடிப்பதற்காகவே பிறந்தவன், கவிஞன் அல்ல என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் எழுதிய கவிதைத் தொகுப்பு சிடி மும்பையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அப்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே சச்சினின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,



'சச்சின் கிரிக்கெட்டில் சாதித்துவிட்டார். அவர் கவிதை எழுத முன்வர வேண்டும்" என எனது மூத்த சகோதரர் நிதின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார். ஆனால் நான் இதுவரை கவிதை எழுதியதில்லை. கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை கொடுத்துள்ளார். அதை சரியாகப் பயன்படுத்தினால் வெற்றிபெறலாம். நான் கவிதை எழுதுவதைப் பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை என்றார்.


சுயசரிதை எழுதும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டபோது, 'சுயசரிதை எழுதுவது குறித்து எந்த எண்ணமும் இல்லை. அதைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமும் இல்லை. ஒருவேளை சில நாள்கள் கழித்து அந்த எண்ணம் வரலாம்" என்றார்.

தலைவர் பதவியிலிருந்து நீக்கியது சட்டத்திற்கு புறம்பானது: கல்மாடி

காமன்வெல்த் விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து தன்னை விளையாட்டுத்துறை அமைச்சர் நீக்கியது சட்டத்திற்கு புறம்பானது என சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார்
 தன்னை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நியமித்த இந்திய ஒலிம்பிக் கழகத்திற்கு மட்டுமே தன்னை நீக்கும் அதிகாரம் உள்ளது என்று கல்மாடி கூறியுள்ளார்

Tuesday, January 25, 2011

பாகிஸ்தான் வீரர்கள் சச்சினிடமிருந்து பாடம் கற்க வேண்டும்: ஜாவிட் மியாண்டாட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கரிடமிருந்து நிறைய விடயங்களைக் கற்க வேண்டும் என அவ்வணியின் முன்னாள் தலைவரும் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் பணிப்பாளருமான ஜாவிட் மியாண்டாட் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் வீரர்கள் ஊடகங்களில் வாய்ச் சவால் விடுப்பதை விடுத்து போட்டிகளில் தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Monday, January 24, 2011

உலகக் கிண்ண இந்திய அணிபற்றி சுனில் கவாஸ்கர், பிரேன் லாரா ஆரூடம்

இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்ல தகுதியான அணி இந்திய கிரிக்கெட் அணி என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரேன் லாரா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாஸ்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்திருந்த போதே சுனில் கவாஸ்கர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேபோன்று உலக கிண்ணத்துக்கான அணி தேர்வு குறித்து கருத்து வெளியிட்ட போதே லாரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கவாஸ்கர் மேலும் தெரிவிக்கையில், 'இப்போதுள்ள இந்திய அணி அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என்போரை உள்ளடங்கிய சம பலம் நிறைந்த சிறந்த அணியாக உள்ளது. அதனால் உலகக் கிண்ணத் தொடரை நடத்திய நாடுகள் கிண்ணத்தை வென்றதில்லை என்பதை முறியடித்து இம்முறை இந்திய அணி கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்" என்றார்.

தோ‌னி, யுவரா‌‌ஜ், ரெ‌ய்னா‌வி‌ன் பொறு‌ப்ப‌ற்ற ஆ‌ட்ட‌த்தா‌ல் தொடரை இழ‌ந்தது இ‌ந்‌தியா

அ‌ணி‌த் தலைவ‌ர் தோ‌னி, யுவரா‌ஜ் ‌சி‌ங், ரெ‌ய்னா ஆ‌கியோ‌ரி‌ன் பொறு‌ப்ப‌ற்ற ஆ‌ட்ட‌த்தா‌ல் த‌ெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்காவு‌க்கு எ‌திரான ஒரு நா‌ள் போ‌‌ட்டி‌த் தொடரை இ‌ந்‌திய அ‌ணி 2-3 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் இழ‌ந்தது.

செஞ்சூரியனில் நே‌ற்று ந‌ட‌ந்த பக‌ல் இரவு ஆ‌ட்ட‌த்த‌ி‌ல் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இ‌ந்‌திய அ‌ணி முத‌‌லி‌ல் தென்னாப்பிரிக்காவை துடுப்பெடுத்தாட அழை‌த்தது தோ‌னி செ‌ய்த ‌மிக‌ப் பெ‌‌ரிய தவறு.

Friday, January 21, 2011

அவுஸ்திரேலியா 46 ஓட்டங்களால் இலகு வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 46 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது.

ஹோபார்ட் மைதாத்தில் இரவு பகல் ஆட்டமாக நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.

ஒரு நாள் போட்டிகளில் இருந்து முரளிதரன் ஓய்வு

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலக கிண்ண போட்டிகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதோடு ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பார் எனவும் தெரிவித்தார். எனினும் இன்னும் மூன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மாத்திரமே ஐ.பி.எல் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முரளிதரன் இதனை தெரிவித்தார்.

Tuesday, January 18, 2011

274 எனும் வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 274 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டனில் நடைபெறும் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி 127.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 356 ஓட்டங்களை பெற்றது.

நியுசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் அணி தலைவர் விட்டோரி அதிகூடுதலாக 110 ஓட்டங்களை பெற்றார். மேலும் டெய்லர் 78 ஓட்டங்களையும், யுங் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் உமர் குல் 4 விக்கட்டுகளையும், டேன்விர் ஹகமட் 3 விக்கட்டுகளையும், அப்துர் ரஹ்மான் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

Monday, January 17, 2011

உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத்துக்காண

அணி விபரம் டோனி( அணி தலைவர்), செவாக் (துனை தலைவர்), சச்சின் டெண்டுல்கர், கௌதம் கம்பீர், விராத் ஹோலி, சுரேஷ் ரெய்னா, சகீர் கான், யூசப் பதான் , பிரவீன் குமார், அஷிஷ் நெஹ்ரா, முனாப் படேல், பியுஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், அஷ்வின்

Sunday, January 16, 2011

வொட்சன் அபார சதம்: அவுஸ்திரேலியா 6 விக்கட்டுகளால் வெற்றி

மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்திரேயா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷேன் வொட்சன் 161 ஓட்டங்களை அபாரமாக பெற்றதன் மூலம் அவுஸ்திரேலியா 6 விக்கட்டுகளால் இலகுவாக வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸ்ரொஸ் 63 ஓட்டங்களையும், டேவிஸ் 42 ஓட்டங்களையும், பீட்டர்சன் 78 ஓட்டங்களையும் பெற்றனர் பந்து வீச்சில் பிரட்லீ, ஹசி, ஜோன்சன், மற்றும் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

Wednesday, January 12, 2011

இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் ஒரு நாள் போட்டி: தென்னாப்பிரிக்கா 135 ஓட்டங்களால் அபார வெற்றி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 135 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

டர்பனில் இரவு பகல் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் வில்லியர்ஸ் 76 ஓட்டங்களையும், டுமினி 73 ஓட்டங்களையும், அமலா 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணியின் பந்து வீச்சில் சகீர் கான், பட்டேல் மற்றும் சர்மா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

Tuesday, January 11, 2011

மூன்று ஆண்டுகள் மாத்திரம் ஐ.பி.எல். இல் விளையாடுவேன்: முரளிதரன்


ஐ.பி.எல் கிரிக்கட் போட்டியில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மாத்திரமே விளையாடுவேன் என இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இனி கொச்சி அணிக்காக விளையாட உள்ளார். அவரை கொச்சி அணி ரூ.5.6 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன், ஆனால்..........

ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன், ஆனால்....... அதைப் பற்றி பேச விரும்பவில்லை என இலங்கையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சனத் ஜயகூ+ரிய தெரிவித்தார்.

சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் போட்டி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை அணியின் அதிரடி ஆட்டநாயகன் ஜயசூர்யா கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜயசூரிய,

99, 2000 ஆம் ஆண்டுகளில் எழுந்த சூதாட்ட சர்ச்சையால் எனது ஆட்டம் பாதித்தது: ச‌ச்‌சி‌ன்

1999 - 2000 ஆம் ஆண்டுகளில் வலுவாக எழுந்த கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை‌யால் தனது ஆ‌ட்ட‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதாக இ‌ந்‌திய ‌வீர‌ர் ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர் தெரிவித்துள்ளார்.

99, 2000 ஆம் ஆண்டுகளில் எழுந்த சூதாட்டம் சர்ச்சை குறித்து தென்னாப்பிரிக்காவில் த‌னியா‌‌ர் தொ‌லை‌க்கா‌ட்‌சி‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌ ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சூதாட்ட சர்ச்சை தொடக்கத்தில் எனது ஆட்டத்தையும், இந்திய அணியின் ஆட்ட திறனையும் பாதித்தது. அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களை சந்தேகத்துடன் பார்த்தது அணியினருக்கு கடினமானதாகவும், மனவலி நிறைந்ததாகவும் இருந்தது.

Monday, January 10, 2011

பந்து வீச்சு பயிற்சியாளராக விருப்பம்: பிரட் லீ


உலக கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காத பட்சத்தில், பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் உள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான 34 வயதுடைய பிரட் லீ, கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தார். காயம் காரணமாக நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாத இவர், இங்கிலாந்துக்கு எதிரான இருபது-20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவிர இவர், அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ள உலக கிண்ண தொடருக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம் பிடித்துள்ளார்.

கங்குலி இல்லாத கொல்கத்தா அணி ஐ.பி.எல். இல் சாத்தியமில்லை : ஷாருக்கான்

 கங்குலி இல்லாத கொல்கத்தா அணி ஐ.பி.எல். இல் சாத்தியமில்லை என கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். 4ஆவது போட்டிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்களின் ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பல முன்னணி வீரர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

எனினும் முன்னாள் இந்திய அணியின் தலைவரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலிக்கு ஆரம்ப தொகையாக ரூ.1.8 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அவரது சொந்த கொல்கத்தா அணியே அவரை தேர்ந்து எடுக்க வில்லை.

Sunday, January 9, 2011

இருபது-20: இந்தியா 21 ஓட்டங்களால் வெற்றி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இருபது-20 முதல் போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

டர்பனில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரோகித் சர்மா அதிரடியாக 34 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 53 ஓட்டங்களை பெற்றார். மேலும் ரெய்னா 41 ஓட்டங்களையும், கோஹ்லி 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஐ.பி.எல். ஏலம்: ஜெயசூர்ய, கெயில், லாரா, கங்குலி ஏலத்தில் எடுபட வில்லை - (இரண்டாம் நாள் ஏலம்)

பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலத்தில் இலங்கை வீரர் ஜெயசூர்யவை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதேவேளை நேற்று நடைபெற்ற ஏலத்தில் சவ்ரவ் கங்குலி, பிரைன் லாரா, கிரிஸ்கெய்ல் ஆகியோரும் நேற்று ஏலத்தில் எடுப்பட வில்லை.


எனினும் யாரும் அறியாத அவுஸ்திரேலிய சகலதுறை ஆட்டகாரர் கிறிஸ்டியனை  டெக்கான் சார்ஜர்ஸ் அணி ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்தியன் பிரிமீயர் லீக்  20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான 4ஆவது தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் முதல் நாள் நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று நடைபெற்றது.  இதில் இந்திய வீரர் கவுதம் கம்பீர் அதிகபட்சமாக ரூ.11.04 கோடிக்கு ஏலம் போனார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

ரொபின் உத்தப்பாவை புனே அணியும், யூசுப் பதானை கொல்கத்தா அணியும் ஏலம் எடுத்தன. இவர்கள் இருவரும் தலா ரூ.9.66 கோடிக்கு விற்பனையானார்கள்.  இந்திய அணியின் மற்றொரு வீரர் ரோஹித் சர்மா 9.20 கோடிக்கும், இர்பான் பதான் ரூ.8.74 கோடிக்கும், யுவராஜ்சிங் ரூ.8.28 கோடிக்கு முறையே மும்பை, டெல்லி, புனே அணிகளால் வாங்கப்பட்டனர்.

Saturday, January 8, 2011

பண மழையில் ஐ.பி.எல். வீரர்கள்

நான்காவது ஐ.பி.எல். 20- இருபது கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 8  ஆம் திகதி முதல் மே 22 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு ஐ.பி.எல். வீரர்களின் 2 நாட்கள் ஏலம் பெங்களுரில் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

முதல் 3 ஐ.பி.எல். போட்டியுடன் இந்திய மற்றும் சர்வதேச வீரர்களுடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் அனைத்து வீரர்களும் புதியதாக ஏலத்திற்கு விடப்பட்டு தேர்வு இடம்பெறுகின்றது.

 இருப்பினும் கடந்த போட்டிகளில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களில் 4 பேரை தொடர்ந்து வைத்துக்கொள்ளலாம் என்ற விதிப்படி தோனி, சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய், எல்பி மோர்கல் ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெண்டுல்கர், ஹர்பஜன்சிங், பொல்லார்ட், மலிங்க, ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷெவாக்கை டெல்லி டெயார்டெவில்சும், விராட் கோக்லியை பெங்களுர் ரோயல் செலஞ்சர்சும், வார்னே, வொட்சன் ஆகியோரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளன. இந்த 12 வீரர்களை தவிர மொத்தம் 350 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates