Sunday, January 30, 2011

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி அவுஸ்திரேலியா 51 ஓட்டங்களால் வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 51 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றுள்ளது.



பிரிஸ்பேனில் இரவுபகல் ஆட்டமாக நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுளையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில், கிளாக் 54 ஓட்டங்களையும், ஹெடின் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.


இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில், கிறிஸ் வோக்ஸ் 10 ஓவர்களில் அபாரமாக 45 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

250 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுளையும் இழந்து 198 ஓட்டங்களை மட்டும் பெற்றது. துடுப்பாட்டத்தில் பீட்டர்சன் அதிகூடுதலாக 40 ஓட்டங்களையும், பெல் 36 ஓட்டங்களையும் பெற ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் வொட்சன் 3 விக்கட்டுகளையும், பிரட் லீ, பொலிஞ்சர் மற்றும் ஹெஸ்டிங்ஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.      

இதனையடுத்து அவுஸ்திரேலிய அணியின் 51 ஓட்டங்களால் வெற்றி பெற்று 7 கொண்ட போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என முன்னிலையில் உள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனான இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசிய கிறிஸ் வோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates