Wednesday, January 26, 2011

தலைவர் பதவியிலிருந்து நீக்கியது சட்டத்திற்கு புறம்பானது: கல்மாடி

காமன்வெல்த் விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து தன்னை விளையாட்டுத்துறை அமைச்சர் நீக்கியது சட்டத்திற்கு புறம்பானது என சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார்
 தன்னை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நியமித்த இந்திய ஒலிம்பிக் கழகத்திற்கு மட்டுமே தன்னை நீக்கும் அதிகாரம் உள்ளது என்று கல்மாடி கூறியுள்ளார்

 மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கெனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்
 ஜனவரி, 2011 அன்று எனக்குக் கிடைத்த உத்தரவு கண்டு அதிர்ச்சியடைந்தேன். என்னை சட்டவிரோதமாகவும் முறையின்றியும் கொமன்வெல்த் செயற்குழுவிலிருந்தும் ஒருங்கிணைப்புக் குழு தலைமைப் பொறுப்பிலிருந்தும் நீக்கியுள்ளனர். ஆனாலும் நான் ஜர்னைல் சிங்கிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறேன். ஆனால் எதிர்ப்புடன் ஒப்படைக்கிறேன்" என்று கல்மாடி குறிப்பிட்டுள்ளார்.
'24
 மேலும் ஒருங்கிணைப்புக் குழு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த அமைப்பின் தலைவர் என்ற முறையில் அந்தச் சங்கத்தின் சட்ட ஆவணங்களுக்கிணங்கவே என்னை நீக்க முடியும். இதனால் கடந்த 24ஆம் திகதி வந்த நீக்க உத்தரவு ஊடகங்களின் ஒரு பிரிவினரால் ஏற்படுத்தப்பட்ட முன்முடிவால் விளைந்தது என்று சாடியுள்ளார் கல்மாடி.
,
. 
.

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates