Tuesday, January 18, 2011

274 எனும் வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 274 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டனில் நடைபெறும் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி 127.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 356 ஓட்டங்களை பெற்றது.

நியுசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் அணி தலைவர் விட்டோரி அதிகூடுதலாக 110 ஓட்டங்களை பெற்றார். மேலும் டெய்லர் 78 ஓட்டங்களையும், யுங் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் உமர் குல் 4 விக்கட்டுகளையும், டேன்விர் ஹகமட் 3 விக்கட்டுகளையும், அப்துர் ரஹ்மான் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.



இதனையடுத்து தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 133 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 376 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 20 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. துடுப்பாட்டத்தில் மிஸ்பா உல் ஹக் 99 ஓட்டங்களையும், யுனிஸ் கான் 73 ஓட்டங்களையும், டபிக் உமர் 70 ஓட்டங்களையும், அசார் அலி 67 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியுசிலாந்து அணியின் பந்து வீச்சில் கிறிஸ் மார்டினெ; மற்றும் விட்டோரி ஆகியோர் தலா 4 விக்கட்டுகளையும், டிம் சதீஸ் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 90.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 293 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் குப்டில் 73 ஓட்டங்களையும், மெக்கலம் 64 ஓட்டங்களையும், டெய்லர் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் உமர் குல் 4 விக்கட்டுகளையும், அப்துர் ரஹ்மான் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து நியுசிலாந்து அணி 273 ஓட்டங்களால் முன்னிலை பெற்றதோடு, பாகிஸ்தானுக்கு 274 எனும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates