Wednesday, January 12, 2011

இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் ஒரு நாள் போட்டி: தென்னாப்பிரிக்கா 135 ஓட்டங்களால் அபார வெற்றி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 135 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

டர்பனில் இரவு பகல் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் வில்லியர்ஸ் 76 ஓட்டங்களையும், டுமினி 73 ஓட்டங்களையும், அமலா 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணியின் பந்து வீச்சில் சகீர் கான், பட்டேல் மற்றும் சர்மா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.


290 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் ஒரு ஓட்டத்துடனும், டெண்டுல்கர் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய கோஹ்லி 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சர்மா 11 ஓட்டங்களுடனும், யுவராஜ் சிங் 2 ஓட்டங்களுடனும், டோனி 25 ஓட்டங்களுடனும், ரெய்னா 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
தென்னாப்பிரிக்கா பந்து வீச்சில் லோன்வபோ சொட்சோபே 4 விக்கட்டுகளை அதிரடியாக கைப்பற்றினார்.
 
போட்டியின் ஆட்டநாயகனாக லோன்வபோ சொட்சோபே தெரிவுசெய்யப்பட்டதோடு, 5 தொடர் கொண்ட போட்டியில் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலையில் உள்ளது.
அடுத்த ஒருநாள் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி ஜொகனஸ்பேர்கில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates