அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 46 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது.ஹோபார்ட் மைதாத்தில் இரவு பகல் ஆட்டமாக நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றது.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான வொட்சன் மற்றும் ஹெடின் ஆகியோர் தலா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும் இடைநடு வீரராக களமிறங்கிய மார்ஸ் 110 ஓட்டங்களை பெற்றார். மற்றும் வைட் 45 ஓட்டங்களையும், டிபாலிஞ்சர் 30 ஓட்டங்களையும் பெற ஏனைய வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில், ~hஜட் மற்றும் டேர்மலட் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
231 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் பெல் மற்றும் தோர்ட் ஆகியோர் தலா 32 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் பொலிஞ்சர் சிறப்பாக பந்து வீச் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இன்றை போட்டியின் ஆட்டநாயகனாக மார்ஸ் தெரிவு செய்யப்பட்;டார்.

No comments:
Post a Comment