Sunday, January 16, 2011

வொட்சன் அபார சதம்: அவுஸ்திரேலியா 6 விக்கட்டுகளால் வெற்றி

மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்திரேயா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷேன் வொட்சன் 161 ஓட்டங்களை அபாரமாக பெற்றதன் மூலம் அவுஸ்திரேலியா 6 விக்கட்டுகளால் இலகுவாக வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸ்ரொஸ் 63 ஓட்டங்களையும், டேவிஸ் 42 ஓட்டங்களையும், பீட்டர்சன் 78 ஓட்டங்களையும் பெற்றனர் பந்து வீச்சில் பிரட்லீ, ஹசி, ஜோன்சன், மற்றும் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.



295 ஓட்டம் எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி வொட்சனின் அபார சதத்துடன் 49.1 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மட்டும் இழந்து 297 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் வொட்சன் ஆட்டமிழக்காது 161 ஓட்டங்களை பெற்றார். மேலும் ஹெடின் 39 ஓட்டங்களையும், கிளாக் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் பிரஸ்மன் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

 இதன் மூலம் 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. இப் போட்டியில் வொட்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates