Tuesday, January 11, 2011

99, 2000 ஆம் ஆண்டுகளில் எழுந்த சூதாட்ட சர்ச்சையால் எனது ஆட்டம் பாதித்தது: ச‌ச்‌சி‌ன்

1999 - 2000 ஆம் ஆண்டுகளில் வலுவாக எழுந்த கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை‌யால் தனது ஆ‌ட்ட‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதாக இ‌ந்‌திய ‌வீர‌ர் ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர் தெரிவித்துள்ளார்.

99, 2000 ஆம் ஆண்டுகளில் எழுந்த சூதாட்டம் சர்ச்சை குறித்து தென்னாப்பிரிக்காவில் த‌னியா‌‌ர் தொ‌லை‌க்கா‌ட்‌சி‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌ ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சூதாட்ட சர்ச்சை தொடக்கத்தில் எனது ஆட்டத்தையும், இந்திய அணியின் ஆட்ட திறனையும் பாதித்தது. அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களை சந்தேகத்துடன் பார்த்தது அணியினருக்கு கடினமானதாகவும், மனவலி நிறைந்ததாகவும் இருந்தது.


என்னாலும் அந்த காலகட்டத்தில் சரியான மனநிலையுடன் ஆடமுடியாத நிலை இருந்தது எ‌ன்று கூ‌றியு‌ள்ள ச‌ச்‌சி‌ன், சூதாட்டம் தொடர்பாக என்னை எந்தவொரு நபரும் அணுகியது கிடையாது எ‌ன்று‌ம் அணி வீரர்கள் கூட்டத்தில் நாங்கள் சூதாட்டம் குறித்து எந்தவித ஆலோசனையும் நடத்தியது கிடையாது எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

எல்லா ஆட்டத்திலும் மக்கள் தெரிவிக்கும் மோசமான விமர்சனம் எங்களது மனதை பாதிக்கிறது எ‌ன்று கூ‌றியு‌ள்ள டெ‌ண்டு‌ல்க‌‌ர், கிரிக்கெட் ரசிகர்கள் பழைய சம்பவங்களை மறந்து ஆட்டத்தில் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது எ‌ன தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates