Sunday, January 9, 2011

இருபது-20: இந்தியா 21 ஓட்டங்களால் வெற்றி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இருபது-20 முதல் போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

டர்பனில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரோகித் சர்மா அதிரடியாக 34 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 53 ஓட்டங்களை பெற்றார். மேலும் ரெய்னா 41 ஓட்டங்களையும், கோஹ்லி 28 ஓட்டங்களையும் பெற்றனர்.


தென்னாப்பிரிக்கா பந்து வீச்சில் தெரோன் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

169 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்று 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

தென்னாப்பிரிக்கா துடுப்பாட்டத்தில் நிக்கோ வேன் அதிரடியாக 39 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 67 ஓட்டங்களை பெற்றார். எனினும் தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் நெஹரா மற்றும் யூசுப் பதான் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தெரிவு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates