Monday, January 10, 2011

பந்து வீச்சு பயிற்சியாளராக விருப்பம்: பிரட் லீ


உலக கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காத பட்சத்தில், பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் உள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான 34 வயதுடைய பிரட் லீ, கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தார். காயம் காரணமாக நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாத இவர், இங்கிலாந்துக்கு எதிரான இருபது-20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவிர இவர், அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ள உலக கிண்ண தொடருக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம் பிடித்துள்ளார்.


இதுகுறித்து பிரட் லீ கருத்து தெரிவிக்கையில், உலக கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முழுவீச்சில் போராடுவேன். ஒருவேளை தேர்வு செய்யப்படாவிட்டால், அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்ற விரும்புகிறேன்.

தற்போது எனது கவனம் முழுவதையும் இங்கிலாந்துக்கு எதிரான இருபது-20 போட்டி மீது வைத்துள்ளேன். இதில் எனது திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், உலக கிண்ண தொடருக்கு எளிதாக தகுதிபெற்றுவிடலாம். என பிரட் லீ கூறினார்.

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates