Friday, January 21, 2011

ஒரு நாள் போட்டிகளில் இருந்து முரளிதரன் ஓய்வு

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலக கிண்ண போட்டிகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதோடு ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பார் எனவும் தெரிவித்தார். எனினும் இன்னும் மூன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மாத்திரமே ஐ.பி.எல் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முரளிதரன் இதனை தெரிவித்தார்.


38 வயதுடைய முத்தையா முரளிதரன் 339 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி துடுப்பாட்டத்தில் 667 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதிகூடுதலாக 33 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

பந்து வீச்சில் 339 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 517 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 30 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை கைப்பற்றி இருந்தமை சிறப்பான பந்து வீச்சாகும்.

No comments:

Post a Comment

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates